S.Sareen 104: A Historic Century
Back to Updates
achievement

S.Sareen 104: A Historic Century

Editor
September 29, 2026
எஸ். சரீன் 104:

கிரிக்கெட்டில் சில இன்னிங்ஸ்கள் வெறும் ஓட்டங்களின் எண்ணிக்கையாக இருப்பதில்லை. அவை போராட்டம், நம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றின் அடையாளமாக மாறுகின்றன. தென்மறவர்களின் போர் 2026 போட்டியில் டிறிபேர்க் கல்லூரியின் எஸ். சரீன் பதிவு செய்த 104 ஓட்டங்கள் அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் ஆக அமைந்து விட்டது

மீசாலை வீரசிங்கம் பாடசாலைக்கு எதிரான இரண்டாவது பருவகாலத்தின் முதல் இன்னிங்ஸில் டிறிபேர்க் கல்லூரி வெறும் 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 118 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆனை எதிர்கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் நிலைமை மோசமடைந்தது. வீரசிங்கம் மத்திய கல்லூரியின் கே. சஜந்தனின் அபாரமான பந்துவீச்சில் டிறிபேர்க் கல்லூரி வெறும் 5 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

Article image

இன்னிங்ஸ் தோல்வி நிச்சயம் எனத் தோன்றிய அந்த தருணத்தில் சரீன் களமிறங்கினார். நிதானத்துடன் தொடங்கிய அவர், பின்னர் அதிரடியை வெளிப்படுத்தினார். 175 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 104 ஓட்டங்கள் குவித்து தனது சதத்தைப் பதிவு செய்தார். இத்தொடர் வரலாற்றின் முதலாவது சதம் இதுவாகும்.

சிவரூபனுடன் இணைந்து அவர் அமைத்த 109 ஓட்டங்களின் இணைப்பாட்டம், டிறிபேர்க் கல்லூரியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீட்டெடுத்து 198 ஓட்டங்களை எட்டச் செய்தது.

அணியின் வெற்றி பறிக்கப்பட்டாலும், சரீனின் போராட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த விக்கெட் காப்பாளர் ஆகிய இரு விருதுகளையும் அவர் பெற்றார்.

சரீன் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் கிரிக்கெட் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட சிறந்த வீரரும் ஆவார். புத்திசாலித்தனமும் ஒழுக்கமும் கொண்ட அவர், பயிற்சியாளர்களின் ஆலோசனைகளை கவனமாகக் கேட்டு, அவர்களின் வழிகாட்டுதலை மதித்து, தனது திறமையை தொடர்ந்து மேம்படுத்த பாடுபடுகிறார்.

Article image

தென்மறவர்களின் போர் 2026 போட்டியில் அவர் பதிவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க 104 ஓட்டங்கள் அவரது விடாமுயற்சியையும் போராட்ட குணத்தையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஓட்டங்களையும் சாதனைகளையும் தாண்டி, அவரது குணநலன், அணுகுமுறை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையே எங்களை மிகவும் பெருமைப்படுத்துகின்றன.

TCA-வில் தொடங்கிய அவரது பயணம் முதல், களத்தில் வரலாறு படைத்தது வரை, கடின உழைப்பு, பணிவு மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை சரீன் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

S. Sareen 104: A Historic Century

In cricket, some innings are more than just numbers on a scoreboard. They become symbols of fight, belief, and determination. In the Battle of Thenmaravars 2026, T. Sareen of Driberg College produced one such historic innings, scoring a magnificent 104 runs.

In the first innings against Meesalai Veerasingam College, Driberg College were bowled out for just 81 runs, falling 118 runs behind and being forced to follow on. The second innings brought even more pressure. Under the outstanding bowling of K. Sajenthan of Veerasingam Central College, Driberg College were reduced to just 5 runs for 6 wickets.

Article image

With an innings defeat seemingly inevitable, Sareen stepped onto the field. Starting with patience and composure, he gradually shifted gears and launched a remarkable counterattack. Facing 175 balls, he scored 104 runs, including 7 fours and 9 sixes, becoming the first century-maker in the history of this series.

Alongside Sivaruban, Sareen built a crucial 109-run partnership, helping Driberg College fight back from the brink of defeat and reach 198 runs.

Although victory slipped away from the team, Sareen's heroic effort earned him the recognition he deserved. He was awarded both Best Batsman and Best Wicketkeeper of the match.

104 (175) | 7 Fours | 9 Sixes | 109-run Partnership

Sareen is not only a talented cricketer but also a player known for his honesty, dedication, and genuine passion for the game. He is a smart and disciplined young player who listens carefully to his coaches, respects their guidance, and always strives to improve.

His historic 104-run century in the Battle of Thenmaravars 2026 is a wonderful reflection of his determination and fighting spirit. But beyond the runs and achievements, it is his character, attitude, discipline, and commitment that make us especially proud.

From his journey at TCA to making history on the field, Sareen continues to show what can be achieved through hard work, humility, and belief.

We are proud of you, Sareen. Keep learning, keep working hard, and keep shining!

Sareen's 104 — a century that will forever be remembered in the history of Thenmaravar cricket.