A Fighting Partnership of 109 Runs – S. Sivaruban Rocks the Thenmaravar!
Back to Updates
achievement

A Fighting Partnership of 109 Runs – S. Sivaruban Rocks the Thenmaravar!

Editor
October 2, 2026
5 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள்! அங்கிருந்து 109 ஓட்ட இணைப்பாட்டம் — இ. சிவரூபனின் சாதனைப் பயணம்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கும் டிறிபேர்க் கல்லூரிக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மறவர் கிரிக்கெட் சமரில், டிறிபேர்க் கல்லூரியின் அணித்தலைவரும் தென்மராட்சி கிரிக்கெட் அகடமியின் பெருமைக்குரிய வீரருமான இ. சிவரூபன், அனைவரும் நினைவுகூர வேண்டிய ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Article image

முதல் இன்னிங்ஸில் டிறிபேர்க் கல்லூரி 81 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் Follow-on ஆடிய அணிக்கு, வெறும் 5 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அத்தகைய இக்கட்டான தருணத்தில், சிவரூபனும் சரீனும் களத்தில் இணைந்தனர்.

தோல்வியின் விளிம்பில் நின்ற அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், இருவரும் இணைந்து 161 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த இணைப்பாட்டம் வெறும் ஓட்டங்களின் தொகையல்ல; நெருக்கடியை எதிர்கொள்ளும் மனவலிமை, பொறுமை, தன்னம்பிக்கை, ஒருவர்மீதொருவர் கொண்ட நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்தது.

சிவரூபன் 81 பந்துகளில் 5 நான்குகள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 72 ஓட்டங்களைப் பெற்று அசத்தினார். மறுபுறம், சரீன் 175 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

டிறிபேர்க் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. எனினும், ஆட்டத்தின் முடிவைத் தாண்டி, நெருக்கடியான சூழலில் இரு வீரர்களும் வெளிப்படுத்திய போராட்டக் குணம் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.

எமது பெருமை — சி. சிவரூபன்

தென்மராட்சி கிரிக்கெட் அக்கடமியைப் பொறுத்தவரையில், சிவரூபனின் இந்த ஆட்டம் வெறும் ஓட்ட எண்ணிக்கைகளைக் கடந்த ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.

Article image

2018ஆம் ஆண்டு முதல் எமது அக்கடமியில் கிரிக்கெட் பயிற்சிகளைப் பெற்றுவரும் சிவரூபனின் வளர்ச்சியை நாம் பெருமையுடன் அவதானித்து வருகின்றோம். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சிறுவனாக எம்முடன் இணைந்த அவர், இன்று டிறிபேர்க் கல்லூரியின் அணித்தலைவராக உயர்ந்து நிற்பது எமக்குக் கிடைத்த மகிழ்ச்சியான அனுபவமாகும்.

தென்மறவர் கிரிக்கெட் வரலாற்றில் டிறிபேக் கல்லூரி முதன்முதலாக அரைச்சதம் பெற்ற வீரர் என்ற பெருமையை கடந்த ஆண்டு அவர் பெற்றுள்ளார். 2025ஆம் ஆண்டிலும் சிறப்பாக விளையாடிய அவர், 2026ஆம் ஆண்டிலும் மற்றுமொரு அரைச்சதத்தைப் பதிவு செய்து தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

களத்தில் திறமையான துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி, பணிவும் நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட இளைஞராகவும் அவர் விளங்குகின்றார். கிரிக்கெட் மீதான அவரது உண்மையான காதலும் அர்ப்பணிப்பும் அவரைத் தனித்துவப்படுத்துகின்றன.

எம்மை மேலும் மகிழ்ச்சியடையச் செய்யும் விடயம் என்னவெனில், இன்று சிவரூபன் எமது அக்கடமியின் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து புதுமுக மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் உதவுகின்றார் என்பதாகும்.

ஒரு காலத்தில் எம்மிடம் கிரிக்கெட் கற்றுக்கொண்ட சிறுவன், இன்று அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவதற்குத் தனது பங்களிப்பை வழங்குகின்றார். இதைவிட ஓர் அகடமிக்குப் பெருமை தரும் தருணம் வேறென்ன இருக்க முடியும்?

From 5 Runs for 6 Wickets to a Fighting Partnership of 109 Runs – S. Sivaruban Rocks the Thenmaravar!

S. Sivaruban, captain of Drieberg College and a proud product of Thenmaradchi Cricket Academy, delivered an innings to remember in the historic Thenmaravar cricket encounter against Meesalai Veerasingam Central College.

After Drieberg College were dismissed for 81 runs in their first innings, the team faced a difficult follow-on in the second innings. With six wickets down for just five runs, the situation looked desperate. But S. Sivaruban and S. Sereen refused to give up.

Together, they built a remarkable 109-run partnership off 161 balls, bringing hope and fighting spirit back to the Drieberg innings.

Sivaruban scored a brilliant 72 runs off 81 balls, including five fours and four sixes, while S. Sereen produced an outstanding 104 runs off 175 balls. Their partnership demonstrated the value of patience, trust, courage, and teamwork under pressure.

Drieberg College eventually finished their second innings at 198 all out, and Meesalai Veerasingam Central College won the match by five wickets. Although the result went against Drieberg, the determination shown by both Sivaruban and Sereen made this innings a memorable chapter in the match.

Our Pride – S. Sivaruban

At Thenmaradchi Cricket Academy, this achievement means much more than a scorecard.

Sivaruban has been training with our academy since 2018. Over the years, we have watched him grow from a young cricket enthusiast into a confident player and leader. He made history as the first player to score a half-century in the history of the Thenmaravar encounter, and he has achieved another half-century this year, continuing his impressive performances in 2025 and 2026.

Today, he leads his school team as captain. Beyond his batting talent, we know him as an obedient, honest, and dedicated young man who genuinely loves cricket.

What makes us especially proud is that Sivaruban is now helping our coaches train younger children at the academy. The boy who once learned the game with us is now helping the next generation discover their own cricketing potential.

Once a TCA player, always a part of the TCA family. Our journey continues